4 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

“மீனவர்களை காப்பாற்றுங்கள்” -மீனவர்களின் ஆத்மா கோரிக்கை

Share

உயிரிழந்த மீனவர்களின் ஆத்மாவாக கேட்கிறேன் ” அத்துமீறல்களை கட்டுப்படுத்தி , உயிரோடு வாழும் மீனவர்களை காப்பாற்றுங்கள்” என ஒருவர் கோரிக்கை விடுத்து மீனவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

வடமராட்சி சுப்பர்மடம் பகுதியில் ஐந்தாவது நாளாக இன்றைய தினமும் மீனவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் கறுப்பு உடை தரித்து போராட்டத்தில் கலந்துகொண்ட ஒருவரே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் கடலில் உயிரிழந்த மீனவர்களின் ஆத்மாவாக, இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துமாறு கோருகிறேன். அதேவேளை இந்திய மீனவர்களிடமும் , எமது கடல் வளங்களை , எமது சக மீனவர்களின் வாழ்வாதரத்தை, உயிரை அழைக்காதீர்கள் என கோருகிறேன்.

உயிர் வாழும் மனிதர்களாக பல தடவைகள் பலரிடம் கோரிக்கை விடுத்தும் எதுவும் நடவடிக்கை. ஐந்து நாட்களாக தொழிலுக்கு செல்லாமல் தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வருகிறோம். எமக்கான தீர்வினை தருவதற்கு எவரும் தயாராக இல்லை.

அதனால் , உயிரிழந்த மீனவர்களின் ஆத்மாவாக கோரிக்கை விடுக்கிறேன். உயிரிழந்த மீனவர்களின் ஆத்மாவிற்கு மதிப்பளித்தாவது , நடவடிக்கைகளை எடுங்கள். அந்த மீனவர்களின் ஆத்மா சாந்தியடையும் என தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...