ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பதவி விலகுவதற்கு திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பில் கட்சித் தலைமைப்பீடத்துக்கு அவர்கள் தெரிவுபடுத்தியுள்ளனர்.
மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கும் நோக்கிலேயே இவர்கள் பதவி விலக தீர்மானித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வடமேல் மாகாணத்திலும், மயந்த திஸாநாயக்க மத்திய மாகாணத்திலும், சமிந்த விஜேசிறி ஊவா மாகாணத்திலும் களமிறங்குவதற்கு தயாராகி வருகின்றனர்.
சப்ரகமுவ, வடமத்திய, மேல் மற்றும் தென்மாகாணங்களிலும் எம்.பிக்கள் சிலரே பிரதான வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
Leave a comment