பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கைபர் பக்துங்கா மாகாணத்தில் சமீபகலமாக பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றுவருகின்றன.
பொலிஸார் மற்றும் இராணுவ வீரர்களை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுத் தாக்குதல்கள் போன்ற இடம்பெறுகின்றன.
கைபர் பக்துங்வா மாகாணத்தில் ஆப்கானிஸ்தானின் எல்லையையொட்டி அமைந்துள்ள லாக்கி மராவத் நகரில் நேற்று காலை பொலிஸ் அதிகாரிகள் சிலர் வழமையான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பொலிஸாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
பொலிஸார் சுதாரிப்பதற்குள், பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
பயங்கரவாதிகள் சுட்டதில் பொலிஸ் அதிகாரிகள் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
#world
Leave a comment