பாலியல் தொடர்பான குற்றங்கள், இணையத்தில் ஆபாச வீடியோக்கள் மற்றும் ஆபாச புகைப்பகள் கிடைக்கப்பெற்றுள்ளன என சிஐடியின் கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
இணையத்தின் மூலம் 15 வயதுடைய சிறுமி ஒருவரை விற்பனைசெய்து, துஸ்பிரயோகம் செய்த முறைப்பாட்டில் சுமார் 70 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், முகப்புத்தகம் ஊடாக நடைபெறும் துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக சுமார் 900 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
மற்றும் போலி பேஸ்புக் கணக்குகளை பராமரிப்பது மற்றும் பேஸ்புக் கணக்குகளை ஹேக் செய்வது ஆகியவை தொடர்பாக சுமார் 700 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
மேலும் பணமோசடி தொடர்பான முறைப்பாடுகளும் இவற்றில் அடங்குகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment