இவ் ஆண்டுக்கான அமெரிக்க ஓபன் டெனிஸ் தொடரிலிருந்து செரினா வில்லியம்ஸ் விலகியுள்ளார்.
குறித்த தொடரிலிருந்து காயம் காரணமாக தான் விலகுகிறேன் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
செரினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எதிர்வரும் அமெரிக்க ஓபன் தொடரிலிருந்து நான் விலகுகிறேன். எனது தொடைப் பகுதியில் தசை நார் சிதைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களின் பரிசீலனைக்கு பின்னர் அவர்களது ஆலோசனையின் படி இந்த முடிவை எடுத்துள்ளேன். இப்போதைக்கு நான் அந்த காயத்தை ஆற்ற வேண்டியுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.
23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற அவர் , தொடரிலிருந்து விலகியுள்ளமை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Leave a comment