அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் செயற்பட முடியாது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அவ்வாறு அனைவரையும் திருப்திபடுத்த வேண்டுமாக இருந்தால், ஐஸ்கிரீம் விற்பனை செய்யவேண்டும் என ஆங்கில பழமொழி ஒன்று இருக்கின்றது.
அதனால் சவால்களுக்கு மத்தியில் இவ்வாறான வரவு செலவு திட்டம் ஒன்றை சமர்பிக்க அதற்கு விசேட துணிவு அவசியம்.
அத்தகைய துணிவுடனேயே அரசாங்கம் இம்முறை சாத்தியமான வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளது.
அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் முறை அறிமுகப்படுத்தினால் தான், ஊழல் மோசடிகளில் இருந்து வெளிவர முடியும்.
நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், மீண்டும் நாட்டில் கொரோனா அதிகரித்து நாட்டை மீண்டும் முடக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டாம் என நாம் எதிர்க் கட்சியினரிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
#SrilankaNews
1 Comment