பறித்ததோ 03 தேங்காய்: பிணையோ 2 இலட்சம் ரூபாய்

Coconut Robbery

மூன்று தேங்காய்களை பறித்த மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் 2 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

காலி, வகுனகொட பிரதேசத்தில் தனியார் காணியொன்றில் மூன்று தேங்காய்களைப் பறித்தமையால் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் கைதான மூவரும் காலி நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் 2 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்குமாறு பிரதம நீதவான் ஹர்ஷன கெகுனவெல உத்தரவிட்டுள்ளார்.

சிறுமி ஒருவரும் காலியைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு தேங்காயைப் பறித்துள்ளனர். அதிகமாக திருட்டுச் சம்பவங்கள் இடம்பெறுவதால் தென்னந்தோப்பு உரிமையாளர் தனது காணியில் சிசிரிவி கெமராவை பொருத்தியுள்ளார்.

சிசிரிவி காட்சிகளைக் கொண்டே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Exit mobile version