தடுப்பூசி செலுத்தவர்களை திரையரங்குகளில் அனுமதித்தால் அத்திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்படுமென கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவின் தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களை அனுமதிக்கும் திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திரையரங்குகள் உட் பட பொது இடங்களில் தடுப்பு ஊசியை செலுத்தாதவர்களை அனுமதிக்க கூடாது என தமிழக அரசின் சுகாதாரத்துறை நிபந்தனை விதித்திருந்தது நிலையில் இந்த அறிவிப்பானது திரையுலகத்தினர் இடையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்தோடு கலெக்டரின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தமிழக முதல்வருக்கு இது தொடர்பாக கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
அத்தோடு தமிழகத்தில் நேற்றிலிருந்து சுகாதார கட்டுப்பாடுகள் இறுக்கமாக நடைமுறை படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment