நேற்று தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை காரணமாக கரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வந்ததை அடுத்து, அங்கு உள்ள பெரும்பாலான சாலைகளில் நீர் தேங்கி உள்ளது மேலும், வெள்ளம் காரணமாக வாகன போக்குவரத்தும் நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் இன்று மீண்டும் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனை அடுத்து கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment