பாடசாலைகளில் சுகாதார வழிமுறைகள் இறுக்கமாகப் பின்பற்றப்படாவிடின் மீண்டும் பாடசாலைகளை மூடும் அபாயம் ஏற்படுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண (Upul Rohana) தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அதிகமாக கொவிட்-19 தொற்று ஏற்படுகின்றது. இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகும் மாணவர்களின் ஊடாக சில உப கொத்தணிகள் உருவாகியுள்ளன.
இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான முழுமையான பொறுப்பினை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களே ஏற்க வேண்டும். ஆகவே பாடசாலைகளில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
#SrilankaNews
Leave a comment