ரி-20 உலகக் கோப்பை அணியில் அக்சர் படேலுக்கு பதிலாக சர்துல் தாக்கூர் இடம்பிடித்துள்ளார்.
ரி-20 உலக கோப்பை இம் மாதம் ஐக்கிய அமீரகத்தில் நடைபெறவுள்ள நிலையில், கடந்த மாதம் பிசிசிஐயினால், 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
இப்பட்டியலில், பிசிசிஐ கோலி தலைமையிலான இந்திய அணியில் நீண்ட நாட்களுக்கு பின் அஸ்வின் மற்றும் இளம் வீரர்களான இஷான் கிஷன், சூரியகுமார் யாதவ் போன்றோர் இடம் பிடித்தனர்.
டோனி அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி முடிவடைந்த பின்பு இந்திய அணியில் மாற்றங்கள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்திய அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் சர்துல் தாகூர் இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment