தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும், இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர்
ஜுலி சங் இற்கும் இடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று கொழும்பில் இடம்பெற்றது.
அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் உட்பட மேலும் சில முக்கியமான விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன. இந்த தகவலை அமெரிக்க தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கூட்டமைப்பு தரப்பில், அமெரிக்க தூதுவருக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதேபோல பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்படுவதற்கு அமெரிக்காவின் கரிசனையும் தொடர வேண்டும் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனும் சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.
#SriLankaNews
Leave a comment