Gotabaya Rajapaksa and R Sampanthan
செய்திகள்அரசியல்இலங்கை

வாயாலேயே கோத்தாவுக்கு சூனியம் வைத்த சம்பந்தன்!!

Share

ஜனாதிபதி கோத்தாவை வாய்க்கு வந்தவாறு சம்பந்தன் திட்டிய சம்பவம் பாராளுமன்றில் அதுவும் பசிலுக்கு முன்னால் நடந்தேறியுள்ளது.

9ஆவது பாராளுமன்றத்தின் 2ஆவது கூட்டத் தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று காலை ஆரம்பித்து வைத்தார்.

ஜனாதிபதியின் பேச்சை செவிமடுத்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அதையொட்டி இன்று பெரும் கோபம் கொண்டார். பேச்சு முடிந்த கையோடே எழுந்து பாராளுமன்றில் பகிரங்கமாகத் தம் எதிர்ப்பை பதிவு செய்ய அவர் விரும்பினார்.

அதற்காக எழுந்தார். எனினும், யோசித்தவர், பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறி நடக்கக் கூடாது என்பதற்காக அப்படி கருத்துத் தெரிவிப்பதைத் தவிர்த்துக் கொண்டார்.

ஆனால், பாராளுமன்றை விட்டு வெளியே வரும்போது ‘லொபி’யில் தமக்கு முன்னால் எதிர்ப்பட்ட நிதி அமைச்சர் பெசில் ராஜபக்சவிடம் தமது கோபத்தை சம்பந்தன் ஐயா காட்டியுள்ளார்.

ஜனாதிபதியின் இந்தப் பேச்சு வெறும் குப்பை. உருப்படியாக இதில் எதுவும் இல்லை. இதைப் போய் அவரிடம் சொல்லுங்கள். நான் தேநீர் உபசாரத்துக்கு வரவில்லை.

வந்தால் இதை நானே அவருக்கு நேரடியாகக் கூற வேண்டியிருக்கும். அப்படி வேண்டாம் என்பதற்காகத்தான் தேநீர் உபசாரத்தையே தவிர்த்துக் கொண்டிருக்கின்றேன்.

இந்தப் பேச்சு வெறும் குப்பை தவிர வேறு எதுவுமில்லை என்பதை நான் கூறினேன் என்பதை அவரிடம் போய்ச் சொல்லுங்கள். எங்களுடைய நாட்டின் தேசிய பிரச்சினை குறித்து ஏதும் இந்தப் பேச்சில் சொல்லப்படவில்லை.

இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் உங்களுக்கு எதுவும் சரிப்பட்டு வராது. உருப்படவே மாட்டீர்கள் என்பதை அவரிடம் போய்ச் சொல்லுங்கள்” என்று சம்பந்தன் ஐயா சீற்றத்துடன் கூறினார்.

இந்தத் திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத பெசில் ராஜபக்ச விடயத்தைச் சமாளித்து, ‘தாங்க்யூ, தாங்க்யூ…!’ என்று கூறி அங்கிருந்து அகன்றுள்ளார்.

#LocalNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....