Help with Contempt of Court Violations Northern Kentucky Florence Edited
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் அதிரடி இடமாற்றம்: புதிய நீதிவானாக என்.எம். சர்ஜுன் நியமனம்!

Share

சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானாகக் கடமையாற்றி வந்த ஜே.பீ.ஏ. ரஞ்சித்குமார் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாகப் புதிய நீதிவானாக நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதிச் சேவை ஆணைக்குழுவினால் கடந்த 02.01.2026 அன்று இந்த இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதிவானாக ரஞ்சித்குமார் கடமையாற்றிய காலப்பகுதியில், அங்கிருந்த நீதிமன்றக் களஞ்சியசாலையிலிருந்த சான்றுப் பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

களஞ்சியசாலைப் பொருட்கள் மோசடி செய்யப்பட்ட குற்றச்சாட்டின் கீழ், அங்கு கடமையாற்றிய பதில் பதிவாளர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த மோசடிச் சம்பவம் தொடர்பாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளைத் தொடர்ந்தே, நீதிவான் ரஞ்சித்குமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்மாந்துறை நீதிமன்றத்தின் புதிய நீதிவானாக நியமிக்கப்பட்டுள்ள நூர்டீன் முஹம்மட் சர்ஜுன், எதிர்வரும் திங்கட்கிழமை (ஜனவரி 05) தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த நீதிவான் ரஞ்சித்குமார், மட்டக்களப்பில் திருமணம் முடித்து களுவாஞ்சிக்குடி மற்றும் சம்மாந்துறை நீதிமன்றங்களில் பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Share
தொடர்புடையது
anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...

arested 3
இலங்கை

ACMC கடசியின் உப தவிசாளர் உட்பட ஐவர் போதைப்பொருளுடன் கைது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

death body 2
இலங்கை

கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம்!

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின்...

கெமுனு விஜேரத்ன
இலங்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்த கெமுனு விஜேரத்ன !

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமூக வலைத்தளங்கள்...