rusian
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்கு எதிராக ரஷ்யா ஆயுத சோதனை!

Share

அமெரிக்காவிற்கு எதிராக ரஷ்யா ஆயுத சோதனை ஒன்றை மேற்கொண்டுள்ளது.

அமெரிக்காவின் செயற்கை கோளிற்கு எதிராக ரஷ்யா மேற்கொண்ட ஆயுத சோதனையை அமெரிக்கா வன்மையாக எச்சரித்துள்ளது.

அத்தோடு இச்செயற்பாடு பொறுப்பற்றதெனவும் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் தொடருமாயின் அது சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள ஆய்வாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா தமது சொந்த செயற்கை கோள் ஒன்றை வெடிக்க செய்ததால் பூமியின் சுற்றுவட்டத்தில் மாசடைய செய்துள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் விமர்சித்துள்ளனர்.

மேலும் விண்வெளியை ஆயுதமாக்குவதை இதுவரைகாலமும் எதிர்த்து வந்த ரஷ்யாவின் கருத்துகள் பொய்யானதென தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளிவிவகார செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....