உக்ரைனின் வெளிநாட்டு கூலிப்படைகளை கொன்று குவித்த ரஸ்யா!!

22 622771cb6733e

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, தலைநகர் கீவ் உள்பட பல்வேறு நகரங்களை தாக்கி வருகிறது.

மேற்கு உக்ரைனில் உள்ள யாவோரிவ் ராணுவ பயிற்சி மைதானத்தின் மீது ரஷிய போர் கப்பல் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த பயிற்சி மையம் உக்ரேனிய ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்க நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்கா மற்றும் பிற கூட்டணி நாடுகளின் ராணுவ பயிற்சியாளர்கள் மூலம் இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதலில் 180 வெளிநாட்டு கூலிப்படைள் கொல்லப் பட்டுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது. உக்ரைனில் கூலிப்படையாகக் கருதப்படும் வெளிநாட்டினர் கொல்லப்படுவது தொடரும் என்றும் ரஷியா கூறியுள்ளது.

#WorldNews

 

Exit mobile version