உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை கண்டிக்க தொடர்ந்து மறுத்து வரும் சீனா, ரஷ்யாவை தங்களது மூலோபாய கூட்டாளி என தெரிவித்துள்ளது.
சீன பாராளுமன்றக் கூட்டத்தின் பின் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, உலகின் மிக முக்கியமான இரு தரப்பு உறவுகளில் ரஷ்யா, சீனா உறவும் ஒன்று.
சர்வதேச நாடுகளில் எவ்வளவு ஆபத்தான நிகழ்வுகள் நேர்ந்தாலும், தங்களுக்கு இடையிலான மூலோபாய கவனத்தைத் தக்கவைத்து, சீனா ரஷ்யாவின் கூட்டாண்மை வளர்ச்சியை மேம்படுத்தும்.
அமெரிக்கா, உள்ளிட்ட மேலை நாடுகளின் பொருளாதார தடைகளை தாண்டியும் ரஷ்யாவுக்கு பல்வேறு உதவிகளை சீனா செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#WorldNews