” நாட்டில் எரிபொருளுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை. வதந்திகளை நம்பியே மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.”- என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
” வழமைபோன்றே இம்முறையும் எரிபொருள் இருப்பு தொடர்பில் சிலர் வதந்தியை பரப்பினர். இதனை நம்பி மக்கள், தமது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பி கொள்வதற்கு முற்பட்டனர். இதனால்தான் மற்றுமொரு வரிசையும் உருவானது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒன்றரை நாளுக்கு தேவையான இருப்பே இருக்கும். அதிக கேள்வி ஏற்பட்டதால்தான் தட்டுப்பாட்டு நிலைமை உருவாகியது.
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது. ஜனவரி மாதம்வரை தொடர்ச்சியாக விநியோகிக்ககூடிய வகையில் இருப்பு கைவசம் உள்ளது.” – என்றார்.
#SriLankaNews
Leave a comment