vaccineinjectionts483968360 1200691
செய்திகள்உலகம்

ஊசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

Share

உலகம் முழுவதும் தற்போது கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதனால் ஊசி சிரெஞ்சு அதிகமாக தேவைப்படுகிறது.

கடந்த ஓராண்டில் மட்டும் கொரோனா தடுப்பூசிக்காக 725 கோடி ஊசி சிரெஞ்சுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே இருப்பு இருந்த சிரெஞ்சுகள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டுவிட்டன.

அடுத்த ஆண்டு ஊசி தட்டுப்பாடு ஏற்படும் உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உற்பத்தியை அதிகப்படுத்தின. ஆனாலும் கூட போதுமான ஊசி சிரெஞ்சுகளை உற்பத்தி செய்ய முடியவில்லை. எனவே அடுத்த ஆண்டு ஊசி சிரெஞ்சுக்கு உலகம் முழுவதும் கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள ஊசி சிரெஞ்சு தயாரிக்கும் நிறுவனங்களால் ஆண்டுக்கு 600 கோடி சிரெஞ்சுகளையே உற்பத்தி செய்ய முடியும்.

அடுத்ததாக 2வது தவணை ஊசி போடுவதற்காக 700 கோடி ஊசி சிரெஞ்சுகள் தேவைப்படுகிறது. ஆனால் இவற்றை உற்பத்தி செய்வது கடினம். எனவே அடுத்த ஆண்டு 100 கோடி முதல் 200 கோடி ஊசி சிரெஞ்சுகள் வரை தட்டுப்பாடு ஏற்படலாம். இது ஒரு முக்கிய பிரச்சினை ஆகும் என்று அவர் கூறினார்.

 

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...

US Poretest
உலகம்

அமெரிக்கா முழுவதும் வெடிக்கவுள்ள போராட்டம்.

அமெரிக்கா முழுவதும் சனிக்கிழமை அன்று அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள சுமார் 125 இற்கும் மேற்பட்ட...

ukanda bus
உலகம்

கனவுகளை சிதைத்த கல்வி சுற்றுலா – 20 மாணவர்கள் பலி!

கிழக்கு உகாண்டாவில் கல்விச் சுற்றுலா சென்ற பாடசாலை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில், 20 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக...

jordhan iran
உலகம்

ஜோர்தான் மீது ஏவப்பட்ட ஏவுகணைகள் – மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்.

ஜோர்தானில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் போர் வானூர்திகளை இலக்கு வைத்து, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை...