எரிபொருள் விலை அதிகரிக்கப்படமாட்டாதென வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு, நிதி அமைச்சரிடம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா என அமைச்சரிடம் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்களின் நன்மை கருதி செயற்படுவதால், தற்போதைய சூழ்நிலையில் விலை அதிகரிப்பு இடம்பெறாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
#SriLankaNews
Leave a comment