பயங்கரவாத தடைச் சட்டத்தை மீள்பரிசீலனை செய்க! – ஐ.நா மீண்டும் அழுத்தம்
இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு ஐ,நாவுக்கான விசேட தூதுவர் மேரி லாலர் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்,
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்ச சட்டத்தை சர்வதேச சட்டவிதிகளுக்கு ஏற்றவாறு திருத்தியமைக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
இதேவேளை, தடுத்து வைக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் ஹெஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள மனித உரிமை பாதுகாவலர்களின் நிலைமை குறித்த சிறப்பு அறிக்கையாளர் மேரி லாலர் உட்பட ஏழு நீதிபதிகள் இணைந்த குழுவினர், அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Leave a comment