தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் ஒரு நாள் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இச் சேவை மீண்டும் வழமைக்குத் திரும்பவுள்ளது என ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
கிராமசேவையாளர் ஊடாகதேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பவர், தனது விண்ணப்பத்தில் சாதாரண சேவையா அல்லது ஒருநாள் சேவையா என்பதை குறிப்பிட வேண்டும்.
பின்னர் பிரதேச செயலகத்தில் தமக்கான திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே பதிவுசெய்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
விண்ணப்பதாரிகள் இந்த நடவடிக்கை மூலம் தமக்கு வழங்கப்பட்ட திகதிகளில் சென்று தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment