“இந்தியாவில் பகலில் பெண்களை வணக்கும் நாம், இரவில் அவர்களை கூட்டுப் பலாத்காரம் செய்கிறோம்” – இவ்வாறு தெரிவித்துள்ளார் பாலிவுட் நகைச்சுவை நடிகர் வீர் தாஸ்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள ஜான் எப் கென்னடி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாலிவுட் நகைச்சுவை நடிகர் வீர் தாஸ் கலந்து கொண்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்படி தெரிவித்த கருத்து மிகப்பெரும் பேசு பொருளாகியுள்ளது.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியா தற்போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. பாலியல் பலாத்கார சம்பவங்கள்,
கொரோனாவுக்கு எதிரான போர், , நடிகர் – நடிகைகளுக்கு எதிரான ஒடுக்குமுறை, விவசாயிகள் போராட்டங்கள் என பல பிரச்சினைகளை குறிப்பிடலாம்.
எமது நாட்டில் ஒளி -இருள், நன்மை – தீமை என இரண்டு எதிர் எதிப்பு பக்கங்களும் உள்ளன. இதில் ரகசியம் எதுவும் கிடையாது.
மக்களிடையே அன்பை பரப்புவதுடன், அவர்களை சிறந்தவர்களாக உருவாக்குவதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். பகலில் பெண்களை தீஜ்வாமாக வணங்கும் நம் (இந்தியா) நாட்டில், இரவு வேளையில் அவர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர் – என்றார்.
பாலிவுட் நடிகர் ஒருவர் வேறு ஒரு நாட்டில் பேசும்போது இந்தியா தொடர்பில் இவ்வாறு பேசியுள்ளமைக்கு தற்போது பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் அவருக்கு எதிராக டெல்லி காவல் நிலையத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் வழக்கு பதிவு செய்யப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#India
Leave a comment