செய்திகள்இலங்கை

பரீட்சைகள் ஒத்திவைக்க தீர்மானம் – கல்வி மறுசீரமைப்பு அமைச்சு

Share

உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை என்பவற்றை, அடுத்த வருடத்திற்கு பிற்போடத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ் வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை என்பவற்றை, எதிர்வரும் 2022ஆம் ஆண்டிற்கு ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையையும், நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வரை இவ் வருடத்திற்கான உயர்தரப் பரீட்சையையும் நடாத்துவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்திருந்தது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் தொற்றுக் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் அரச பரீட்சைகளை நவம்பர் மாதத்தில் நடாத்துவது தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இந்நிலையிலேயே 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை என்பன, அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை தொடர்பான அறிவித்தலை, கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த விடுத்துள்ளார்.

துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் ஏனைய முடிவுகள் தொடர்பில் அறிவிக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 6990101d03ddb
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய நிதிப் பின்னணி: ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோரும் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்ததாகக் கூறப்படும்...

dailythanthi 2026 02 14 giawqio6 pul
செய்திகள்இந்தியா

புல்வாமா வீரர்களுக்கு 7-ம் ஆண்டு வீரவணக்கம்: நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிப்பு!

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் திகதி, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற...

1763708534 drug 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதைப்பொருள் கும்பலுக்கு மரண அடி! – ஒரே நாளில் 820 பேர் கைது.

இலங்கை அரசாங்கம் மற்றும் காவல்துறை இணைந்து முன்னெடுத்து வரும் ‘நேஷன் யுனைடெட் – நேஷனல் டிரைவ்’...

images 14
செய்திகள்அரசியல்இலங்கை

நுரைச்சோலையில் பாரிய நிலக்கரி ஊழல்? – 5 கப்பல்களும் தரமற்றவை என சஜித் பிரேமதாச அதிரடி குற்றச்சாட்டு!

நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து நிலக்கரி...