P.B. Jayasundera
செய்திகள்அரசியல்இலங்கை

பதவி விலகுகிறார் பி.பீ. ஜயசுந்தர

Share

ஜனாதிபதி செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, 2022 பெப்ரவரி முதலாம் திகதி முதல் நிதி அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகராக செயற்படவுள்ளாரென அறியமுடிகின்றது.

ஜனாதிபதி செயலாளராக பதவி வகிக்கும் பிபீ ஜயசுந்தரவை பதவி விலகுமாறு ஆளுங்கட்சியில் உள்ள உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

இதனால் பதவி விலகுவதற்கு தீர்மானித்துள்ள அவர், இதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தை ஜனாதிபதி ஏற்று, புதிய செயலாளரை நியமிக்கும்வரை பிபீ ஜயசுந்தர பதவியில் நீடிப்பார்.

அதன்பின்னர் அவர் நிதி அமைச்சுக்கு செல்லவுள்ளார். பிரதமரின் ஆலோசனையின் பிரகாரம் அவருக்கு சிரேஷ்ட ஆலோசகர் பதவி வழங்கப்படவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில் பிபீ ஜயசுந்தர, திறைசேரி செயலாளராக செயற்பட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சுரேஷ் சலே 10
இலங்கை

சுரேஷ் சலேயினால் முன்வைக்கப்பட்ட மனு மீதான விசாரணைகள் இம்மாதம் ௨௫ ஆம் திகதி!

அரச புலனாய்வுப் பிரிவு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே யினால் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத...

person calling the police
இலங்கை

தலைமறைவான கொலைக்குற்றவாளி – பொதுமக்களின் உதவியினை கோரிய காவல்துறை!

ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்பொல பகுதியில் பெண் ஒருவரைத் தாக்கிக் கொலை செய்த சம்பவம் தொடர்பில்...

interpol
இலங்கை

இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ள சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட குற்றவாளிகள்!

மலேசியாவில் கைது செய்யப்பட்ட முக்கிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான தனுஷ்க கௌசல்ய என்ற “ரத்மலானே சைமா” உட்பட...

exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...