New Project 2
செய்திகள்இலங்கை

அத்தியாவசியமற்ற பொருட்கள் மீதான இறக்குமதி வரையறை நீக்கம்!

Share

அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரையறை இன்று (01) முதல் நீக்கப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, போதுமான அளவு அந்நிய செலாவணி காணப்படுவதால் எதிர்வரும் 06 மாதங்களுக்கு தேவையற்ற வகையில் பொருட்களை களஞ்சியப்படுத்த வேண்டாமெனவும் இறக்குமதியாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

‘பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாதகால வழிகாட்டல்’ வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றும்போதே, ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குறித்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

இறக்குமதியாளர்கள் பொறுப்புடன் செயற்படுவதுடன், தேவைக்கேற்ப மட்டுமே இறக்குமதியை மேற்கொள்ளுமாறும் மத்திய வங்கி ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் டொலருக்கான பற்றாக்குறை நிலவியதால் அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற 623 பொருட்களுக்கு எதிராகக் கடந்த செப்டெம்பர் 9 ஆம் திகதி முதல் மத்திய வங்கியினால் கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...