அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த 100% வைப்புத் தொகை தேவைப்பாடு நேற்று முதல் நீக்கப்படுகிறது என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இதனை தெரிவித்துள்ளார்.
பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாதகால வழிகாட்டல்’ வெளியீட்டு நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை கூறியுள்ளார்.
போதுமான அளவு அந்நிய செலாவணி காணப்படுகிறது. எதிர்வரும் 6 மாதங்களுக்கு தேவையற்ற பொருட்களை களஞ்சியப்படுத்த வேண்டாம்.
இறக்குமதியாளர்கள் பொறுப்புடன் செயற்படுவதுடன் தேவைக்கேற்ப மட்டுமே இறக்குமதியை மேற்கொள்ளுங்கள் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் கடன் வட்டிக்கான நிவாரணத்துக்கு 15 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் 6 மாதங்களுக்கு வாகனம் சொத்துக்கள் சுவீகரிக்க வேண்டாம் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கோரியுள்ளார்.
நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் டொலருக்கு பற்றாக்குறை நிலவியதால் அத்தியாவசியமற்ற 623 பொருட்களுக்கு மத்திய வங்கியால் கடந்த செப்ரெம்பர் 09 ஆம் திகதி கடுமையான இறக்குமதி கட்டுபாடு விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment