இந்திய இராணுவத்தினரால் யாழ்.போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவு தினம்!

இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 34 வது நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

1987 ம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த 21பேர் இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

இதன் 34 ம் ஆண்டு நினைவு தினம் யாழ் போதனா வைத்தியசாலை ஊழியர்களின் ஏற்பாட்டில் இன்று காலை இடம்பெற்றது.

20211021 094645 1

இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக உயிரிழந்தோரின் உறவுகளால் பொது சுடர் ஏற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

சுகாதார நடைமுறைகளை பேணி மட்டுப்படுத்தப்பட்ட இடம்பெற்ற குறித்த நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பிரதிப் பணிப்பாளர் வைத்தியசாலை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

#SrilankaNews

Exit mobile version