வாகன உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் எவ்வித கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை என இராஜாங்க அமைச்சரான ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடியால் வாகன இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், உதிரி பாகங்கள் தொடர்பில் எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை.
சில தரப்பினர் வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்களின் விலைகளை அநியாயமாக அதிகரித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
அண்மைய மாதங்களில் வாகன உதிரி பாகங்களின் விலைகள் அதிவேகமாக அதிகரித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ரூபாவை வலுப்படுத்தவும், உள்நாட்டு சந்தையில் வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்களின் விலை அதிகரிப்புக்கு தீர்வுகளை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
#SrilankaNews