“தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை. கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே நிச்சயம் தேர்தல் நடத்தப்படும். அதனை எதிர்கொள்வதற்கு நாம் தயார்.” – என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
குருணாகலையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
” மஹிந்த ராஜபக்ச என்பவர் தேர்தலுக்கு அஞ்சம் தலைவர் கிடையாது. முன்கூட்டியே தேர்தலை நடத்திதான் பழக்கம். எனவே, தேர்தலை பிற்போடும் எண்ணம் அரசுக்கு இல்லை. கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே தேர்தல் நடத்தப்படும். அது எந்த தேர்தலாக இருந்தாலும் நாம் வெற்றிகரமாக எதிர்கொள்வோம்.
தேர்தல் என்பது மக்களின் ஜனநாயக உரிமை. அதனை அவர்களுக்கு வழங்க வேண்டும்.” – என்றார்.
#SriLankaNews
Leave a comment