Shehan Semasinghe
செய்திகள்இலங்கை

வீதிகள் துரித அபிவிருத்தி! – இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

Share

விவசாயம் செய்யப்பட்டு வரும் பிரதேச வீதிகள், வைத்தியசாலைகள் பாடசாலைகளுக்கு உட்பிரவேசிக்கும் மற்றும் அவைகளுக்கு அருகில் உள்ள வீதிகள் அனைத்திற்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு நெடுஞ்சாலை அமைச்சு ஊடாக துரித அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

செளபாக்யா எதிர்கால கொள்கை பிரகடன திட்டத்திற்கமைய “முன்னுரிமை வீதி” அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் பிரதேச வீதிகள் அபிவிருத்தி செய்யப்படும் தேவைகள் உணரப்பட்டு இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த வீதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்த் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைய இத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பிரதேச வீதிகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் விவசாய மக்கள் தங்களின் உற்பத்திகளை தாமதமின்றி பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்ல முடியும்.

அதன் மூலம் விவசாய மக்கள் பொருளாதாரத்தை இலகுவில் விருத்தி செய்து கொள்ள முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2
சினிமாசெய்திகள்

புதிய சீரியல் நடிக்கும் மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதன், அட நாயகி இவர் தானா… புதிய ஜோடி, புரொமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட தொடராக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல். இப்போது...

25 6831e6dc4144c
இலங்கைசெய்திகள்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – பிரதமர்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என பிரதமர் ஹரிணி...

20 23
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க விளக்கமறியலில்..

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க எதிர்வரும் 29ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெவ்லோக்...

13 26
இலங்கைசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து நபரின் மோசமான செயல் : அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்வதாக கூறி, பாடசாலை மாணவர்களை குறிவைத்து போதை உருண்டைகளை விற்பனை செய்தவர்...