02 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு மோதலால் இலங்கைக்கு எரிபொருள் தட்டுப்பாடு வராது: ரணில் விக்ரமசிங்க உறுதி!

Share

ஈரானிடம் இருந்து எண்ணெய் கிடைக்காவிட்டாலும் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஈரானை விட ஏனைய நாடுகளிலிருந்தே இலங்கை அதிகளவில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், எரிபொருள் விநியோகத்தைப் பொறுத்தவரை தற்போதைக்கு இலங்கைக்கு பெரிய அச்சுறுத்தல் எதுவும் இல்லை என உறுதி அளித்துள்ளார்.

ஈரான் ஒருவேளை ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) எண்ணெய் கப்பல்கள் மீது குண்டுகளை வீசி, கப்பல் போக்குவரத்தைத் தடுத்தால் மாத்திரமே இலங்கைக்கு பிரச்சினை ஏற்படும் எனக் குறிப்பிட்டார். ஆனால், தற்போது வரை அத்தகையதொரு சூழல் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார். கொழும்பு மல் பார வீதியிலுள்ள அரசியல் காரியாலயத்தில் சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கு பதற்றத்தைத் தொடர்ந்து இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்கத் தொடங்கியுள்ளனர். எனினும், பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளது. டீசல், பெட்ரோல் மற்றும் விமான எரிபொருள் கையிருப்புகள் அடுத்த ஒரு மாதத்திற்கும் மேலாகப் போதுமானதாக உள்ளதால், பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு இல்லாவிட்டாலும், மத்திய கிழக்கு மோதலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால், அது இலங்கையின் எரிபொருள் விலையை நேரடியாக பாதிக்கும். இது பணவீக்கத்தை அதிகரித்து, நாட்டின் மீண்டு வரும் பொருளாதாரத்திற்கு சவாலாக அமையலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...

arested 3
இலங்கை

ACMC கடசியின் உப தவிசாளர் உட்பட ஐவர் போதைப்பொருளுடன் கைது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

death body 2
இலங்கை

கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம்!

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின்...

கெமுனு விஜேரத்ன
இலங்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்த கெமுனு விஜேரத்ன !

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமூக வலைத்தளங்கள்...