nallaru03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் 463 பேர் இடம்பெயர்வு

Share

சீரற்ற காலநிலை காரணமாக 139 குடும்பங்களைச் சேர்ந்த 463 நபர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெயர்ந்து தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டிருகின்றனர் என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று மாலை 6.30 மணி வரையிலான பாதிப்பு தொடர்பாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், நேற்று இரவு முதல் பெய்த மழை காரணமாக யாழ். மாவட்டத்தில் இதுவரை 7,584 குடும்பங்களைச் சேர்ந்த 25,508 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 75 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

குறிப்பாக, யாழ்ப்பாணம்,நல்லூர், சண்டிலிப்பாய், சங்கானை,உடுவில், தெல்லிப்பளை, கோப்பாய், சாவகச்சேரி,கரவெட்டி, பருத்தித்துறை, மருதங்கேணி, வேலணை, ஊர்காவற்றுறை, காரைநகர் பிரதேச செயலர் பிரிவுகளிலேயே இந்த அறிக்கை கிடைக்கப்பெற்றது.

#SRILankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...