“ராஜபக்ச குடும்பத்தினரே நாட்டுக்கு சுமை” – இவ்வாறு தெரிவித்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க.
வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஆனால் பசில் ராஜபக்ச அமைச்சராக இருந்த முன்னாள் அரசாங்கத்தின் காலப்பகுதியிலேயே 87 சதவீதமான ஊழியர்கள் அரச சேவைக்கு இணைத்துகொள்ளப்பட்டுள்ளனர்.
உண்மையில் நாட்டுக்கு ராஜபக்சக்களின் குடும்பமே சுமையாக உள்ளது. நாடு வங்குரோத்து நிலைக்கு செல்கிறது. அதனை தடுப்பதற்கான திட்டங்கள் எவையும் அரசாங்கத்திடம் இல்லை. நாட்டை இந்த நிலைமையில் இருந்து மீட்டெடுப்பதற்கான பொறுப்பு எமக்கும் இருக்கிறது – என்றார்.
#SriLankaNews
Leave a comment