அரசின் பொதுச் சேவை என்பது நாட்டுக்கு பெரும் சுமை. இதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். – இவ்வாறு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
நேற்றையதினம் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொது சேவைக்காக பணத்தை செலவழிக்கவோ, அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ முடியாது.
விதிக்கப்படவுள்ள வர்த்தக பொருள்கள் மற்றும் சேவை வரிகள் திட்டம் எந்தவோர் அத்தியாவசிய பொருள்களுக்கும் விதிக்கப்படவில்லை. மதுபானம் போன்ற பொருள்களுக்கே வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாட்டில் வரிக்கொள்கையானது அடிக்கடி மாற்றம் செய்யப்படாது நிலையாகப் பேணப்பட வேண்டும். இதுவே எமது நிலைப்பாடாகும். அடிக்கடி வரி விதிப்பில் மாற்றம் ஏற்படுத்தும் போது அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். ஒரு வரிக்கொள்கையானது குறைந்தது மூன்று வருடங்களுக்காவது நடைமுறையில் பேணப்பட வேண்டும்.
விதிக்கப்படவுள்ள புதிய வரிக்கொள்கை தொடர்பில் விரைவில் அனைவருக்கும் அறியத்தருவோம் – என்றார்.
#SrilankaNews
Leave a comment