galewela
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசம் சுற்றிவளைப்பு! – இயந்திரங்களுடன் ஐவர் கைது

Share

கலேவெல பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசத்தில்  சட்டவிரோதமாக இயங்கிவந்த  கல் குவாரியை தம்புள்ளை விசேட அதிரடி படையினர் இன்று  சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது 60 மில்லியன் பெறுமதியான இயந்திரங்களை விசேட அதிரடி படையினர் சுற்றிவளைத்ததுடன், சந்தேகநபர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள்  அனுமதிப்பத்திரத்துடன் கல் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களது அனுமதிப்பத்திரம் காலாவதியான பின்னரும் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை எனவும் விசேட அதிரடி படையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த இடத்தில் உரிமம் புதுப்பிக்கப்படாமல் குவாரி இயங்கி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தப்பட்டது.

நான்கு அகழ்வாராய்ச்சி இயந்திரங்கள் மற்றும் ஒரு டிப்பர் வாகனங்கள் இதன்போது மீட்கப்பட்டது.  உள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இந்த இயந்திரங்களின் உதவியுடன் கற்கள் மற்றும் மண்ணை அகற்றி வருவதாகவும் விசேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.

இரண்டு கல்குவாரிகளும் தம்புள்ளை பகுதியில் உள்ள வர்த்தகர்கள் இருவருக்கு சொந்தமானது என விசேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.

பிரதான வீதியில் இருந்து 200-300 மீற்றர் தூரத்தில் குவாரி அமைந்திருந்ததாக விசேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...