இலங்கை கடற்படையின் 71ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு,கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பரிந்துரையின் பேரில் கடற்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் 84 கடற்படை அதிகாரிகளும், 1,684 ஏனைய பதவி நிலையினரும் பதவி உயர்ந்தப்பட்டுள்ளனர்.
குறித்த பதவி உயர்வுகள் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
நாட்டின் கடற்பிராந்தியத்தைப் பாதுகாக்கும் தேசிய அபிலாஷையை நிறைவேற்றுவது தொடக்கம் கடல் எல்லையில் கடற்படை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் அளப்பரியவையாகும்.
#SriLankaNews
Leave a comment