China school
செய்திகள்உலகம்

வீட்டுப் பாடங்களை குழந்தைகளுக்கு வழங்கத் தடை!

Share

சீனாவில் குழந்தைகளுக்கு வீட்டுப் பாடங்களை வழங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளை மன அழுத்தத்திலிருந்து பாதுகாக்க வீட்டுப்பாடங்கள் மற்றும் விசேட வகுப்புகள் உள்ளிட்ட நடைமுறைகளுக்கு தடை விதிக்கும் வகையிலான சட்டவரைவை சீன அரசு தயாரித்துள்ளது.

அண்மைக்காலமாக, குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரையிலானோருக்கு மன ஆரோக்கியத்தை பாதிக்கும் வகையிலான செயல்பாடுகளை சீனா தடை செய்து வருவதுடன், குழந்தைகள் ஒன்லைன் விளையாட்டுகளை வாரத்திற்கு 3 மணி நேரங்கள் மட்டுமே விளையாடுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை குழந்தைகள் இணையதளங்களில் அதிக நேரம் செலவழிப்பதைத் தடுப்பதற்கும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதிலும், குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருப்பதிலும் அதிக கவனம் செலுத்தவேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சட்டவரைவு தயாரிப்புப் பணி முழுமையடைய உள்ள நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
01 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் போதை மாத்திரைகளை விற்ற மருந்தக உரிமையாளர் கைது: 1400 மாத்திரைகள் பறிமுதல்!

மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இளைஞர்களுக்குப் போதைக்காக விற்பனை...

01 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மசகு எண்ணெய் விலை 150 டொலரை எட்டினால் உலகப் பொருளாதார வீழ்ச்சி: பிளாக்ராக் தலைவர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

01 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடி உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி...

01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...