நாட்டில் உள்ள பாடசாலைகளில் பணிபுரியும் 25 ஆயிரம் கல்வி சாரா ஊழியர்கள் இன்னமும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை.
இவ்வாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளை நடத்துபவர்கள், பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடுபவர்கள் மற்றும் ஏனைய சிற்றூழியர்கள் உள்ளிட்ட கல்வி சாரா ஊழியர்களில் சுமார் 25 ஆயிரம் பேர் இன்னமும் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவில்லை.
இவ்வாறு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் மிகவிரைவாக தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
பாடசாலைகளை எவ்வாறு ஆரம்பிப்பது என்பதற்கான பொறிமுறையும், அதற்கேற்ப மாணவர்களுக்கு எவ்வாறு கட்டம் கட்டமாக தடுப்பூசியை வழங்குவது என்பதற்கான பொறிமுறையும் உருவாக்கப்பட வேண்டும் – என்றார்.
Leave a comment