Pervez Khatta
செய்திகள்அரசியல்இலங்கைஉலகம்

பிரியந்தவின் கொலை நியாயமானது: நியாயப்படுத்தும் அமைச்சர்!!!

Share

பாகிஸ்தானில் இலங்கை மேலாளர் மேலாளர் பிரியந்த குமார கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் நியாயப்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டக்கின் (Pervez Khattak) இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் பணியாற்றிய இலங்கையரான பிரியந்த குமார கடந்த வெள்ளிக்கிழமை மிக கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதுடன், உயிருடன் எரிக்கப்பட்டார்.

இச்சம்பவத்திற்கு கடும் அதிருப்திகள் வெளிப்படுத்தப்பட்டு வரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமரான இம்ரான்கான் குற்றவாளிகள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவார்கள் என உறுதியளித்துள்ளார்.

இந்தநிலையில்,குறித்த சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“இது மோசமான சம்பவம் என்று சொல்ல முடியாது. உணர்ச்சியில் இது போன்ற செயல்கள் சில நேரங்களில் நடந்துவிடுகிறது என்று கூறியுள்ளார். இக்கொடூரச் சம்பவத்தைப் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டக் நியாயப்படுத்தியுள்ளமையானது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...