இலங்கை அரசாங்கம் நேற்றுமுன்தினம் 13 ஆயிரம் மில்லியன் ரூபா புதிய நோட்டுக்களை அச்சிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய 13,092.72 மில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது .
கடந்த ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி 1.377 ரில்லியன் ரூபா பணத்தாள்கள் அச்சிடப்பட்டிருந்த நிலையில் இதுவரையில் 1.5560 ரில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது .
அஜித் நிவாட் கப்ரால் நேற்றுமுன்தினம் மத்திய வங்கி ஆளுநராக பதவியேற்ற நிலையில் இவ்வாறு அதிகமாக பணம் அச்சிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் நாட்டின் பொருளாதாரம் நேரடியாக பாதிக்கக்கூடும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Leave a comment