இந்தியா ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் இராணுவ வீரர்களுடன் இந்திய பிரதமர் மோடி அவர்கள் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடியுள்ளார் .
தீபாவளி பண்டிகை நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது .
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை இராணுவ வீரர்களுடன் சேர்ந்து கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் இந்த ஆண்டும் தீபாவளி கொண்டாடுவதற்காக ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா செக்டர் என்ற பகுதிக்கு பிரதமர் மோடி சென்ற அவர் இராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளார்.
#india
Leave a comment