நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் வாரம் சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
மருத்துவத்தேவைக்காகவே அவர் சிங்கப்பூர் செல்லவுள்ளதாக அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொவிட் அச்சுறுத்தல் காரணமாக சிங்கப்பூர் இலங்கை மீது பயணத்தடை விதித்துள்ளது
எனினும் நீண்ட நாட்களாக இலங்கை – சிங்கப்பூர் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கு இடையில் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் 5 பேருக்கு மாத்திரம் சிங்கப்பூருக்குள் பிரவேசிப்பதற்கான அனுமதியை சிங்கப்பூர் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
அவ்வகையில் அடுத்த வாரமளவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அவரது பணிக்குழு தலைவர் யோஷித்த ராஜபக்ச மற்றும் மூன்று பேர் சிங்கப்பூர் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
Leave a comment