60 ஒளடதங்களுக்கான விலைகளில் அதிகரிப்பை ஏற்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று மாலை சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது.
ஒளடத இறக்குமதியாளர்களின் கோரிக்கைகளுக்கு அமைய இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டது எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
டொலர் பற்றாக்குறை காரணமாக இறக்குமதியில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்துகொள்வதற்காகவும் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Leave a comment