04 11
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சார சபை மறுசீரமைப்பு: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க – தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பு!

Share

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்முறை மற்றும் ஊழியர்களின் எதிர்காலம் குறித்த முக்கிய கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பொறியியலாளர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று (12) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. நுகர்வோருக்கு நியாயமான விலையில் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துவதும், அரசாங்கத்தின் கீழ் வலுசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதுமே இந்த மறுசீரமைப்பின் பிரதான நோக்கம் என ஜனாதிபதி இதன்போது விளக்கமளித்தார்.

மறுசீரமைப்புச் செயல்முறையின் போது, மின்சார சபையின் ஊழியர்களின் உரிமைகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என்றும், புதிய நிறுவனங்களிலும் அந்த உரிமைகள் முழுமையாக உறுதிப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார். மேலும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மின்சார சபை ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இந்த மாற்றம் என்பது ஒரு சிக்கலான மற்றும் நீண்டகாலத் திட்டமிடல் அவசியமான செயல்முறை என்பதால், ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே சிறந்த புரிதலை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

ஊழியர்களின் மன நிம்மதியையும், திருப்திகரமான பணிச் சூழலையும் உருவாக்குவதே இந்தச் சீர்திருத்தத்தின் வெற்றிக்கு அடிப்படையாகும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் மீதான அக்கறையுடன் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். மின்சாரத் துறையில் எதிர்காலத்தில் வரக்கூடிய சவால்களை வென்று, நுகர்வோருக்குச் சிறந்த சேவையை வழங்குவதற்காக ஒன்றிணைந்து பயணிக்குமாறு அனைத்துத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

ஜனாதிபதியின் கருத்துகளை ஏற்றுக்கொண்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தற்போதைய மின்சக்தித் துறையின் மாற்றத்தின் அவசியத்தை தாங்களும் அங்கீகரிப்பதாகத் தெரிவித்தனர். சீர்திருத்தங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கும், நாட்டின் வலுசக்தி இலக்குகளை அடைவதற்கும் அரசாங்கத்துடன் முழுமையான ஒத்துழைப்புடன் செயற்படத் தயாராக இருப்பதாக அவர்கள் உறுதியளித்தனர். சுமுகமான உரையாடல் மூலம் மின்சாரத் துறையின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்கு இந்தச் சந்திப்பு ஒரு சாதகமான தொடக்கமாக அமைந்துள்ளது.

Share
தொடர்புடையது
world 22
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெலிக்கடை சிறைக்கைதி மரணம்: மூன்று சிறைக்காவலர்கள் கைது; நீதிமன்றில் ஆஜர்

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 வயதுடைய கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக,...

world 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாலத்தீவு – இலங்கை இடையிலான வரலாற்றுப் பிணைப்பு: ஜனாதிபதி மாளிகையில் டாக்டர் முகமது முய்ஸு உரை

மாலத்தீவு ஜனாதிபதி டாக்டர் முகமது முய்ஸு மற்றும் முதற்பெண்மணி சஜிதா முகமது ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை...

world 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் சட்டவிரோத நடவடிக்கைகள்: 37 சீன நாட்டவர்கள் அதிரடியாக நாடு கடத்தப்பட்டனர்

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதற்காகவும், பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும் பாதுகாப்புப் படையினரால்...

world 19
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – இந்தியா இடையே தரைவழி இணைப்பு: தயக்கங்களை கைவிட வேண்டிய தருணம் என இந்திய உயர் ஆணையர் பேச்சு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தரைவழிப் பாலத்தை அமைக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கையிலுள்ள இந்திய உயர் ஆணையர்...