power1
செய்திகள்இலங்கை

வழமைக்குத் திரும்பியது மின் விநியோகம்!

Share

நாட்டின் பல பகுதிகளில் தடைப்பட்டிருந்த மின் விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ள நிலையில்,சில பகுதிகளில் இன்னும் சீராக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் பரவலாக இன்று காலை முதல் திடீர் மின்தடை ஏற்பட்ட நிலையில், மாலை 4.30 மணிக்கு பின்னரே மின்விநியோகம் பகுதி பகுதியாக சீர்செய்யப்பட்டு வருகிறது.

திடீர் மின்தடை ஏற்பட்ட நிலையில், மக்கள் கடும் அசெளகரியங்களுக்கு உள்ளாகினர்.

குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் பிற்பகலுக்கு பின்னர் நீர் விநியோகம் தடைப்பட்டிருந்தது.

மின்சார தடை காரணமாக ரயில் தண்டவாளங்களின் சமிக்ஞை விளக்குகள் செயலிழந்து காணப்பட்டன. இதனால் கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படவேண்டிய ரயில்கள் தாமதமடைந்தன.

தொலைத்தொடர்பு வரிசைகள் செயலிழந்து காணப்பட்டதுடன், சீரின்றியும் காணப்பட்டன.

நாட்டின் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் எரிபொருளுக்காக வரிசையில் நின்றமையையும் காணக்கூடியதாக இருந்தது.

இந்த நிலையில், தற்போது மின்விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள இலங்கை மின்சார சபை , துணை மின் நிலையங்களின் ஊடாக 1000 மெஹாவோட் மின்சாரம், தேசிய மின் தொகுதிக்குள் இன்று மாலை 4.30க்கு இணைக்கப்பட்டுள்ளது எனவும் அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம், தற்போது முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாகவும் அறிவித்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 2
இந்தியாசெய்திகள்

கரூர் துயரம் – ஆட்டம் காணும் த.வெ.க..! சி.பி.ஐ விசாரணையை கோரிய மோடி தரப்பு

தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

19 2
இலங்கைசெய்திகள்

யாழில் கைதான பெண் சட்டத்தரணி – வடக்கில் வெடித்த போராட்டம்

உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது காவல்துறையினரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து...

18 3
இலங்கைசெய்திகள்

சிறிலங்காவின் போர்குற்றங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அறிவித்த ஐ.நா

இலங்கை தொடர்பான மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை சேகரிக்கும் திட்டத்தை...

17 3
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் பாதுகாப்பு! நிலைப்பாட்டை அறிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் எவ்வித குறைப்பும் செய்யப்பட்டவில்லை. அவர்கள் கோரும் பாதுகாப்பு வழங்கப்படும்...