இலங்கை அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக போராட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இதில் பயங்கரவாத தாக்குதல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
நாட்டில் நிலவி வரும் அரசாங்க செயற்பாடுகளை எதிர்த்து சஜித் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி போராட்டமொன்றை இன்று முன்னெடுக்கவுள்ளது.
குறித்த போராட்டத்தை குறிவைத்து பயங்கரவாத தக்குதல்கள் நடத்துவதற்கு சந்தர்ப்பம் இருப்பதாக வந்த முறைப்பாட்டின் பேரில் போராட்டத்தினை தடைசெய்யுமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Leave a comment