17 10
செய்திகள்இலங்கை

கைது செய்யப்பட்டவரின் வங்கி அட்டையைப் பயன்படுத்தி மோசடி: பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

Share

ஹெரோயின் கடத்தல் குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் உள்ள ஒருவரின் வங்கி அட்டையைத் தவறாகப் பயன்படுத்தி, 6 இலட்சம் ரூபாவிற்கும் அதிகப் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கொஸ்கொட பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

விசாரணைகளில், சந்தேகநபரான கான்ஸ்டபிள் அந்த வங்கி அட்டையைப் பயன்படுத்தி சொகுசு மோட்டார் சைக்கிள் ஒன்றைக் கொள்வனவு செய்துள்ளதும், மேலும் ஒரு சுப்பர் மார்க்கெட்டில் பெருமளவிலான பொருட்களைப் கொள்வனவு செய்துள்ளதும் அம்பலமாகியுள்ளது. கைதான நபரின் வங்கி அட்டையை முறையற்ற விதத்தில் கையாண்ட இந்தச் செயல், பொலிஸ் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மோசடிச் செயலில் குறித்த கான்ஸ்டபிளுக்கு உதவியாகச் செயல்பட்ட ஏனைய நபர்களையும் அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள், தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் மேற்பார்வையில், காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நாமல் பெரேராவின் வழிகாட்டலில் மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Share
தொடர்புடையது
குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...

Featured mm
இலங்கை

பெக்கோ சமன் தாயார் படுகொலை – பின்னணியில் பழிவாங்கும் படலம்!

பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க என்பவரின்...

Arrest 13
இலங்கை

இலகுவாக வீடு கட்டிக்கொள்ளலாம் – தவணைமுறையில் பணம் பெற்று பலரிடம் மோசடி செய்த நபர் கைது.

வீடு கட்டித் தருவதாகக் கூறி சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு நபர்களிடம் பெருந்தொகை பணத்தை மோசடி...

எல் நினோ
இலங்கை

2027 ஏப்ரல் வரை நீடிக்கவுள்ள எல் நினோ தாக்கம்!

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின்...