20211209 114614 scaled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காணி சுவீகரிப்புக்கு துணைபோகும் மக்கள் பிரதிநிதிகள்!

Share

மக்கள் பிரதிநிதிகள் காணி சுவீகரிப்புக்கு துணைபோகின்றனர் என காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் பிரதிநிதி இன்பம் தெரிவித்தார். இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

யுத்தத்தின் பின்னரும் மக்களிடம் உறுதிப்பத்திரங்களை மிரட்டி சுவீகரித்துக் கொள்கின்றனர்.

பொது அமைப்புக்கள் என்ற வகையில் நாங்கள் இதற்கு தொடர்ச்சியாக கண்டன போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

இச்சூழ்நிலையில் எங்களுடைய அரசியல் தலைமைகள் இதனை தடுத்து நிறுத்தக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்பதே உண்மை. இது எமக்கான சந்தேகத்தை அதிகரிக்கின்றது.

காணி சுவீகரிப்பு சார்ந்த விடயங்கள் நாடாளுமன்றம் மற்றும் சர்வதேச மனித உரிமைத் தளங்களிலும் பேசுபொருள் ஆக்கப்படாமை படையினருக்கு வாய்ப்பாகவே அமைந்துள்ளதாக மக்கள் அமைப்பின் பிரதிநிதி இன்பம் மேலும் தெரிவித்தார்.

மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் கரையோர மக்களின் காணிகளை கடற்படையினரும் இராணுவத்தினரும் ஆக்கிரமிப்பதற்கு அரச அதிகாரிகள் துணை போவதாக இந்த சந்திப்பில் கலந்து கொண்ட இரட்ணசிங்கம் முரளீதரன் குற்றஞ்சாட்டினார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பேராசிரியர் சரத் அபேகோன்
இலங்கை

ஜனாதிபதிக்கு பறந்த பதவி விலகல் கடிதம்.

தமது பதவியிலிருந்து விலகுவதாக மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், பதவி விலகல் குறித்த...

are 2
இலங்கை

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கைது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கைது...

j poretest d
இலங்கை

மாநகர சபைக்குள் நுழைய வேண்டிய நிலை உருவாகும் – அதற்கு முன் விரைந்து நடவடிக்கை எடுங்கள்!

யாழ்ப்பாணம் – காக்கை தீவு மக்கள் மாநகர சபைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு...

arested 1
இலங்கை

வெளிநாட்டில் இருந்து வருகை தருவோரை இலக்குவைத்து நடத்தப்படும் சம்பவம்.

திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் நேற்றைய தினம் யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....