Milk 750x375 1
செய்திகள்இலங்கை

200 ரூபாவால் அதிகரிக்கிறது பால்மா விலை!!!

Share

ஒரு கிலோ பால்மா விலையை 200 ரூபாவால் அதிகரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்புதலை வாழ்க்கைச் செலவுக் குழு வழங்கியுள்ளது என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இவ் விலை அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் டொலர் பற்றாக்குறை நிலவி வரும் காரணத்தால் பால்மா இறக்குமதியாளர்கள் பல்வேறுபட்ட இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு கிலோ பால்மாவின் விலையை 350 ரூபாவால் அதிகரிக்குமாறு அரசாங்கத்திற்கு முன்மொழியப்பட்டது.

இந்த கோரிக்கைக்கு இணங்க ஒரு கிலோ பால்மாவின் விலையை 200 ரூபாவால் அதிகரிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

நாட்டின் நெருக்கடி நிலையையை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் பால்மாவின் விலை மீண்டும் அதிகரிக்க சாத்தியம் உண்டு – என லக்ஷ்மன் வீரசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...